ஓடும் ரயிலில் உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை தவிக்க விட்டு தப்பி ஓடிய காதலன் மீது பொய்யாக கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரை சேர்ந்த கரேன் பார்மர்(35) என்ற பெண், அதே நகரிலில் உள்ள 23 வயதுடைய நபருடன் பழகி வந்துள்ளார்.
இந்த ஜோடி இருவரும் அங்குள்ள ஷொப்பிங் மாலிற்கு சென்று, அங்கு பொது இடத்திலேயே மிகவும் நெருக்கமாக இருந்தது அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்திற்கு பின்னர், ரயில் நிலையத்திற்கு சென்ற அந்த ஜோடி, ப்லன்ட்டிரே நகருக்கு செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர்.
ரயில் பெட்டியில் யாரும் இல்லாததால், இருவரின் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் ரயிலில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானது.
பின்னர், ப்லன்ட்டிரே நகர் வந்ததும் இருவரும் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர்.
அப்போது, ‘கழிவறைக்கு சென்று வருகிறேன்’ என கூறி சென்ற காதலன் அப்படியே தப்பி ஓடியுள்ளார்.
நீண்ட நேரம் காத்திருந்து தனது காதலன் வராததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், ‘உன்னுடைய காரியம் முடிந்ததும் என்னை தனியாக தவிக்க விட்டு போய்விட்டாயே…எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது’ என கைப்பேசியில் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
மேலும் ஆத்திரம் அடங்காத அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் ‘ரயிலில் ஒருவர் தன்னை கற்பழித்து விட்டு தப்பிவிட்டதாக’ புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து அந்த நபரை கைது செய்து விசாரணை செய்த போது தான் உண்மை அம்பலமானது.
ஷொப்பிங் மால் மற்றும் அவர்கள் பயணித்த ரயில் பெட்டியிலிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் மூலம் அந்த பெண் கற்பழிப்புக்கு உள்ளாகவில்லை என தெரியவந்தது.
2012ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான இந்த விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், பொய் புகாரை கூறி பொலிசாரின் நேரத்தை வீணாக்கியது நிரூபனம் ஆகியுள்ளது என்றும் அதற்கான தண்டனை தீர்ப்பை அடுத்த மாதம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.