வாகன வரி மற்றும் பெறுமதி சேர் வரி தற்காலிகமே – அஷோக் அபேசிங்க

வாகன வரி மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளமை குறுகிய காலத்துக்கே என, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் சிரமப்படுத்தும் எந்தவொரு உள்நோக்கமும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு  கருத்து வௌியிட்டுள்ளார்.