அமைச்சர் ஜோன்’க்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் அதிகரிப்பு தொடர்பாக சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத நல்லிணக்கஅமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் வாகனங்களை உபயோகிப்பதாலே விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறைப்பாடானது தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் வேறெந்த நாட்டிலும் கோரப்படாத தகுதி சாதாரண வாகனங்கள் கொள்வனவிற்கு இலங்கையில் கோரப்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டி நியாயத்தைக் கோரியே தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மனித உரிமைகள்ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.