4 டெஸ்ட் தொடர் – மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி

டெஸ்ட் போட்டிகளில் ஆட மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 6ம் திகதி தனது பயணத்தை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்காக ஜூலை 6ம் திகதி செயின்ட் கிட்ஸ் செல்லும் இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை, தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றிய கோஹ்லிக்கு குறித்த இந்த தொடர் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டெஸ்ட் போட்டிகள் விபரம்:-

முதல் போட்டி – ஜூலை 21 – ஆண்டிகுவா

இரண்டாவது போட்டி – ஜூலை 30 – ஜமைக்கா

மூன்றாவது போட்டி – ஆகஸ்ட் 9 – செயிண்ட் லூசியா

நான்காவது போட்டி – ஆகஸ்ட் 18 – டிரிணிடாட் மற்றும் டுபாகோ