கால்பந்தாட்டம் மட்டுமே தனக்கு தெரியும் – மெஸ்ஸி நீதிமன்றில் அறிவிப்பு

அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரும் பார்சிலோனா அணி வீரருமான லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை உருகுவே உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களின் பெயர்களில் 4.6 மில்லியன் டொலர்கள் அளவு முறைகேடாக முதலீடு செய்து வரி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஸ்பெயினின் பார்சிலோனா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணையின் போது நேற்று லியோனல் மெஸ்ஸி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மெஸ்ஸி, கால்பந்தாட்டத்தை தவிர தனக்கு வேறு எதுவும் குறித்து தெரியாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.