மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகின்றது.
இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது.
குறித்த இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொலார்ட் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் சிறந்த பெறுபேறை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் காணப்படுகிறது.
மறுகணத்தில், தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவ்வணியின் பந்துவீச்சு வரிசை எவ்வாறு செயற்படப் போகின்றது என்றும் உலக இருபதுக்கு-20-இல் அவ்வணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காத நிலையில், சிறந்த துடுப்பாட்ட பெறுபேறை வழங்கவேண்டிய அழுத்தமும் அவ்வணிக்கு காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.