தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசு திட்டம்

அதிகரித்துள்ள தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தினை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்ப்பதால் அதிகரிக்கப்பட்ட தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிகவிரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.