மத்திய வங்கியிலிருந்து ரூ.14.5 மில்லியன் பணத்தினை மத்திய வங்கியின் தலைவர் சுருட்டியுள்ளார்

மத்திய வங்கியின் தலைவர் பொழுது போக்கிற்காக நாளாந்தம் 5000ரூபாயை செலவு செய்வதாக விமல் வீரவன்ஸ குற்றஞ் சுமத்தியுள்ளார்.

கடந்த 11 மாதங்களாக மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் 14.5மில்லியனை ஒதுக்கியுள்ளதாகவும், இதில் அவரது நாளாந்த பொழுது போக்கிற்காக மட்டும் 20 லட்சங்களுக்கு மேற்பட்ட தொகையினை ஒதுக்கியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் போது ஆடைகளுக்காக மட்டும் 21 லட்சங்களை செலவு செய்துள்ளதாகவும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் மத்திய வங்கியின் தலைவர் இவ்வாறு 145 லட்சங்களை தனிப்பட்ட தேவைக்காக செலவு செய்திருப்பதாகவும் விமல் வீரவன்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.