ஐ.நா.வின் பயிற்சி, ஆராய்ச்சி அமைப்பின் (UNIDAR) தலைவராக, இந்தியத் தூதரக மூத்த அதிகாரி நிகில் சேத் அவர்களை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.
அந்தப் பதவியை வகித்து வரும் அயர்லாந்தைச் சேர்ந்த சாலி பெகன் வையில்ஸ் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டியே, நிகில் சேத்’தை பான் கீ மூன் நியமித்திருக்கிறார்.
தில்லி பல்கலைகழகத்தில், நிகில் சேத் முதுகலை பொருளாதாரப் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர், ஐ.நா.வின் பொருளாதார, சமூக விவகாரங்கள் துறையின் நிலையான வளர்ச்சி பிரிவின் இயக்குநராக உள்ளார். ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாகவும், சுவிட்சர்லாந்து, காங்கோ ஆகிய நாடுகளிலும் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பதும் சுட்டிக்காட்டக் கூடியது.