நல்லாட்சியில் தமிழர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை – சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தற்போதைய நல்லாட்சியில் இடம்பெறுவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் வடக்கு கிழக்கில் ஒரு சில விடுவிக்கப்பட்ட போதிலும் எஞ்சியுள்ளவை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்