கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பி.லியனஆராய்ச்சியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மேலும் தெரியவருகின்றது.
அண்மையில் சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை வீரர் ஒருவரை கடும் சொற்களால் திட்டினார்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.