பேருவளையில் மீனவர்கள் காலி வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில்

பேருவளை பிரதேச மீனவர்கள் காலி வீதியை மறித்து தற்சமயம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்ததை அடுத்தே மீனவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் கொழும்பு – காலி வீதியை மறித்து பேருவளை நகரில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.