மாத்தறை -வெலிகம் பிரதேசத்தில் உள்ள இலங்கை கிரிகட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் கடந்த 6ம் திகதி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது சடலம் வெலிகமவில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை அவதானிக்கும் போது, கையடக்கத்தொலைபேசி மின்னூற்றி வலையினால் (phone charger) இவரது கழுத்து சுருக்கிடப்பட்டிருந்ததாகவும், பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.