இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்கள் இலங்கை அணிக்கு போதுமானதாக இல்லை என்று இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணாரத்னே புலம்பியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை லாட்சில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இலங்கை அணி எசெக்ஸ் மற்றும் லேசெஸ்டெர்ஷைர் அணிகளுக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட தலா ஒரு பயிற்சி ஆட்டத்தில் மோதியது.
இதில் இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணாரத்னே நான்கு இன்னிங்சில் 8, 16 (அவுட் இல்லை), 0 மற்றும் 100 (அவுட் இல்லை) ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால் இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வதற்கான தகுந்த ஆட்டங்கள் இல்லை என்று அவர் புலம்பித் தீர்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற ஒரு பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து தொடருக்கான நல்ல முன்னேற்றமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
பயிற்சி ஆட்டத்தில் எங்களுக்கு எதிராக விளையாடிய வீரர்கள் 2வது நிலை வீரர்கள் தான். 2வது பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வைத்திருந்தனர். இதனால் அந்தப் போட்டியில் சதம் அடித்தும் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று கூறியுள்ளார்.