பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷ்ய பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் ஷரபோவா இதுவரை 5 கிராண்ட் ஸலாம் பட்டம் வென்றுள்ளார்.

இவர், அண்மையில் மேல்டோனியம் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்திய காரணத்திற்காக இவருக்கு கடந்த மார்ச் மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், 2016 ஜனவரி 26 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு ஓரு தலைபட்சமான தீர்ப்பு என கூறியுள்ள மரியா, இதனை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடக்கவிருக்கும் ரியோ ஒலிம்பிக்கில் இவருக்கு பதிலாக வேறு வீராங்கனை சேர்க்கப்படவுள்ளார்.