அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தன் வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வணக்கத்துக்குரிய உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிறைவு செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால், நீதவான் நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நிறைவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.