அங்கவீனமுற்ற படையினர்கள் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் இன்று முதல் பயணிக்கலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அண்மையில் அரசாங்கத்தினால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை பயன்படுத்தி அங்கவீனமடைந்த படையினர்களுக்கு, புகையிரதப் பற்றுச்சீட்டுக்காக 100ற்கு 50 வீதம் என்ற சலுகை வழங்கப்படவுள்ளதாக புகையிரதப் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் அங்கவீனமுற்ற படையினர்களுக்காக குறித்த இந்த சலுகையினைப் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.