தகவல் அறியும் சட்டமூல வரைவு தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி பாராளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக குறித்த சட்டமூல வரைவு தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரகாரம் வழங்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
தகவல் அறிந்து கொள்வதை மக்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பது குறித்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.