வெலேசுதாவின் சொத்து விவரங்களை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஹெரோயின் விற்பனை முக்கியஸ்தரும், மரண தண்டனை கைதியுமான வெலே சுதாவின் சொத்து அறிக்கையினை நீதிமன்றம் கோரியுள்ளது.

குறித்த அறிக்கையினை ரகசியப் பொலிஸாரிடம் கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி தொடர்பில் வெலே சுதாவிற்கு எதிரான வழக்கானது இன்று நீதிமன்றில் நீதவான் குறித்த  இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வெலே சுதாவுடன் இணைத்து கைது செய்யப்பட்டுள்ள 7 பேருக்கு மேலதிகமாக 17 பேரை கைது செய்ய வேண்டியிருப்பதாக ரகசிய பொலிஸார் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.