5 கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடு கடத்தி வந்த பெண் கைது

சட்டவிரோதமாக தங்கத் தகடுகள் சிலவற்றை இலங்கைக்கு கொண்டுவந்த கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு இன்று (10) அதிகாலை 1.10 அளவில் வந்த விமானத்தில் பயணித்த கணக்காளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.

10 கிலோ கிராம் எடையுடைய 100 தங்கத் தகடுகள் குறித்த கணக்காளரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் இலங்கை பெறுமதி 5 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 31 வயது பெண் கணக்காளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.