வாகன வரி தொடர்பில் திருத்தங்கள் – நிதியமைச்சர்

வாகன இறக்குமதியாளர்களுடன் இன்று(11)  இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக வாகன வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சீர் திருத்தம் காரணமாக வாகன வரி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வரி அதிகரிப்பு காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கே மேற்படி சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்பபடையில், வரி அதிகரிப்பினால் வாகன இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.