பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சுகாதார அமைச்சுப் பதவியை ராஜித சேனாரத்னவிடம் இருந்து பெற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆலோசனையாளருமான சென்னன் முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் என்ற ரீதியில் சந்திரிக்காவைப் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு அவரால் மட்டுமே தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ள சென்னன், சுகாதார அமைச்சராக சந்திரிக்காவை நியமிக்குமாறும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.