இந்தியாவை விட பாகிஸ்தானிடமே அணு ஆயுத போர் தளவாடங்கள் அதிக உள்ளதாக தகவல்

இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகமான அணு ஆயுத போர் தளவாடங்களை வைத்திருப்பதாக சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாடும் வைத்துள்ள அணு ஆயுதங்கள் பற்றிய புள்ளி விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டில், இந்தியா 100 முதல் 120 அணு ஆயுத தளவாடங்களை வைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தானோ 110 முதல் 130 அணு ஆயுத தளவாடங்களை வைத்துள்ளது. இது, இஸ்ரேலை விட அதிகம். கடந்த ஆண்டும், இந்தியாவை பாகிஸ்தான் மிஞ்சி இருந்தது.

அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகளிடமும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 395 அணு ஆயுதங்கள் இருப்பதாக இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.