கைவிரலில் முறிவு ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகி உள்ளார்.
3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர் சதம் அடித்தார். இந்த போட்டியின்போது வார்னருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.
எக்ஸ்ரே எடுத்த பார்க்கப்பட்டது. அப்போது அவரது இடது ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரால் 6 வார காலம் விளையாட முடியாது. பீல்டிங்கின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. வார்னர் ஆடாமல் போவது ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமே. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.
இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலியா 9 புள்ளியுடனும், தென் ஆப்பிரிக்கா 5 புள்ளியுடனும், வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளியிலும் உள்ளன.