இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான (எட்கா) சர்வதேச வியாபார உடன்படிக்கைக்கு முன்னர் அது தொடர்பான தேசிய கொள்கையொன்றை அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 10 லட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை அரச வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்னர் பொறுப்பானவர்கள் முறையான உடன்படிக்கையொன்றைத் தயாரிக்க வேண்டும் எனவும் அச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.