அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே காணப்படுகின்ற சம்பள முரண்பாடு தொடர்பில் இதுவரை தீர்வுகள் கிடைக்காததால் அகில இலங்கை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உயர்நீதி மன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் அரச நிர்வாக பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஈ.எம்.ஜே.எஸ்.சேரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரம் அவகாசம் தருவதாகவும், அதற்கு பிறகும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்வது உறுதி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.