வெலே சுதாவுக்கும்-முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து மீள் விசாரணைகள் ஆரம்பம் – CID

வெலே சுதாவுக்கும்-முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான தொடர்பு சம்பந்தமாக மீள் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் பெரும்புள்ளியான வெலே சுதா பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு இங்கு அழைத்து வந்ததன் பிறகு குறித்த பொலிஸ்மா அதிபருடன்வெலே சுதாவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து தெரிய வந்ததாகவும், எனினும்குறித்த பொலிஸ்மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச்சென்று தற்போது இலங்கையில் சுதந்திரமாக  உலாவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த பொலிஸ்மா அதிபருக்கு வெலே சுதா சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பில் அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த விடயம்  ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ்  கோவைகளுக்குள்ளே முடக்கப்பட்டு விட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

இதேவேளை பலவருடங்களாக எவ்வித விசாரணைகளும் நடைபெறாமல் கிடக்கும் குறித்த விசாரணை கோவையானது தற்போதைய பொலிஸ்மா அதிபரான பூஜித ஜயசுந்தரவின்அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்தே  இவ்வாறு மீள்விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.