தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 2 வருட தடைக்காலத்தை ரத்து செய்யுமாறு கோரி, ரஷ்யாவின் டென்னிஸ் வீரர் மரியா ஷரபோவா மேன்முறையீடு செய்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்தமைக்காக, ஷரபோவாவுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்து குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் 2006ம் ஆண்டு முதல் ஊக்கமருந்துகளை தாம் பயன்படுத்திவந்த போதும், அதனை அறிந்தே பயன்படுத்தவில்லை என்று ஷரபோவா கூறி வருகிறார்.
இந்த நிலையிலேயே அவர் இந்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
29 வயதான அவர், ஐந்து தடவைகள் க்ராண்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.