இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பயிற்சிற்கான உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பயிற்சி மற்றும் தகவல், ஆவணங்கள் பரிமாற்றம் தொடர்ப்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைசாத்திடப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் மவ்லூத் ஜாவீஷ் ஓக்லோ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

அதேவேளை துருக்கி வெளிவிவகார அமைச்சர் மவ்லூத் ஜாவீஷ் ஓக்லோ இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆகியோரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.