கித்ருவன் மற்றும் ரமித ஆகியோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை..

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான கித்ருவன் விதானகே மற்றும் ரமித ரம்புக்வெல்ல ஆகிய இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இருவரும் அண்மையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் முரண்பட்டுக்கொண்டதாகவும் குறித்த நடத்தைக்கே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒழுக்காற்று நடவடிக்கையினால் மேற்குறிப்பிட்ட இரு வீரர்களுக்கும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.