ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிதி மோசடி தொடர்பான வழக்கு குறித்து குருநாகல் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்னலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ச.தொ.ச கூட்டுறவு நிலையங்களில் நிதி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது. பொருட்களை பெற்றுக்கொண்டதன் மூலம் 5 மில்லியன் ரூபா மோசடி செய்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட மூவர் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி குறித்து 53 ஆவணங்கள் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை ஜூலை 7 ஆம் திகதி வழங்குமாறு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததுடன், அடுத்த வழக்கை செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே 5 அம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.