இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்ப்பதாக அமைச்சர் ப. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியும் அவரது கட்சியை சேர்ந்த மற்றுமொருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படவிருப்பதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.
ஆறுமுகன் தொண்டமான் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.