பட்டாணி ராசிக் கொலைக்கு றிசாத் பதியுதீனுக்கும் ஓர் அணுவளவேனும் சம்பந்தம் இல்லை

சீ.டி.எப் (C.T.F). என்று அழைக்கப்படும் சமூக நம்பிக்கை நிதியத்தின் நிதிப் கடமையாற்றிய  பட்டாணி ராசிக் கொலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு ஓர் அணுவளவேனும் சம்பந்தம் இல்லை என பொலிஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இவரது படுகொலை தொடர்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேக நபரான தட்ட சமீன் என அறியப்படும் அப்துல் காதர் சமீன் கடந்த வியாழக்கிழமை கட்டாரில் இருந்து மூன்று வருடங்களின் பின்னர் குறித்த சந்தேக நபர் நாடு திரும்பிய போது  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் கைது செய்யப்படுவார் என சமூக ஊடங்களில் வதந்திகள் பரப்பபட்டன. இந்த நிலையிலேயே பட்டாணி ராசிக் கொலை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஓர் அணுவளவேனும் சம்பந்தம் இல்லை என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியை அண்மித்த நாட்களில் புத்தளத்தினைச் சேர்ந்த பட்டாணி ராசிக் கடத்தப்பட்டு, இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது சடலமானது 2011ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள  வீடு ஒன்றினுள் இருந்து தோண்டியெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது