இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது என இந்திய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்ற வகையீடு ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அந்த நாடுகளில் குடியுரிமைப் பெற்றுக் கொண்டதனை இது குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் குடியுரிமை வழங்கப்படுவதற்கும் அவர்கள் தாம் இந்திய வம்சாவளியினர் என்பதனை உறுதி செய்ய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அகதிகள் இந்திய வம்சாவளியினர் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை பற்றிய சட்டங்களில் மாற்றம் செய்தாலே இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.