எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் இணையவுள்ள ஒன்றிணைந்த எதிர் கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி பெற்று கொடுக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்துடன் இணைய தயாரகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர் கட்சியில் இருப்பதால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது என அறிந்த அந்த கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.