உயிர் குடிக்கும் ‘கவனயீனம்’

கடந்த எட்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இக் காலப்பகுதியில் 71 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிகமானவை சாரதிகளின் கவனயீனத்தால் இடம்பெற்றவையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அடிமனதிலிருந்து ஆழ்ந்த அனுதாபங்கள்.

‘கவனயீனம்’ இன்று எல்லா தளங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

சாரதியின் ‘கவனயீனம்’ உயிருக்கு உலை வைக்கிறது.

பெற்றோரின் ‘கவனயீனம்’ பிள்ளைகளை வதைக்கிறது.

கலவரங்களின்போதான காவல் துறையினரின் ‘கவனயீனம்’ ஒரு சமூகத்தின் முதுகெலும்பை முறித்து விடுகிறது.

உயர் அதிகாரிகளின் ‘கவனயீனம்’ களவுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

மகப்பேற்று வைத்தியரின் ‘கவனயீனம்’ சிசுவின் வருகைக்கு கதவடைப்பு நடத்துகிறது.

புது மணத் தம்பதியினரின் ‘கவனயீனம்’ விவாகரத்தின் வாசல் வரை அழைத்துச் செல்கிறது.

உணவுட்கொள்வதில் ‘கவனயீனம்’ உடல் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிறது.

வியாபாரத்தில் ‘கவனயீனம்’ வாழ்வாதாரத்தின் வயிற்றில் இடிக்கிறது.

பெற்றோர் மீதான பிள்ளையின் ‘கவனயீனம்’ நல்வாழ்வை நசுக்கி விடுகிறது.

வணக்க வழிபாட்டில் ‘கவனயீனம்’ இறை சாபத்துக்கு தூபமிடுகிறது.

வேண்டாம்… ‘கவனயீனம்’

தொடர்ந்தால் ஆபத்து வரும், கவனம்!