மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மத்திய வங்கியின் ஆளுனரது பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் நாளை மறுதினம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளது.
இதன்படி, கொழும்பு 7 மஹரகம சேகர வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனரது பதவியை நீக்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.