முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு கொழும்பு நகரின் மேயராக வெற்றி பெற்று காண்பிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சவால் விடுத்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, தாம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையானது நகைப்புகுரிய ஒன்று.
அவரால் முடியுமானால் அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கொழும்பு நகரின் மேயராகி காண்பிக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.