பாராளுமன்றக் கலைப்பு பற்றியும் பொதுத் தேர்தல் பற்றியும் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியே பேசியது. எனினும், எமது சிறுபான்மை அரசாங்கம் நீடித்திருப்பதற்கு ஐ.ம.சு.மு.வே காரணம்.
அந்த வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? அல்லது 20 நிறைவேற்றப்படும? என்பதை எதிர்க்கட்ச்சியே தீர்மானிக்க வேண்டும். எந்த தீர்மானத்துக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
எந்தவொரு பயமும் எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கூடிய சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவினால் விடுவிக்கப்பட்டிருந்த கூற்று தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பியான தினேஸ் குணவர்த்தன சிறப்புரிமைப் பிரச்சினைன ஒன்றை எழுப்பினார்.
மேற்படி சிறப்புரிமை பிரச்சினையானது, சபைக்குள் சர்ச்சை நிலையை உருவாக்கியதுடன். இது தொடர்பில் ஆளும்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்களும் எழுந்ததுடன் சபையில் கூச்சல் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.