ஹாக்கி அணி வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பள நிலுவை

இந்திய அணியின் தலைவர் டோனி, மற்றும் சக நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரெய்னா ஆகியோருக்கு சொந்தமான ஹாக்கி அணிகளில் விளையாடிய வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியன் ஹாக்கி லீக்கில் பங்கேற்கும் ராஞ்சி ரேய்ஸ் அணியை டோனியும், விசார்ட்ஸ் அணியை ரெய்னாவும் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு அணியிலும் 10 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 24 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டள்ளனர்.

இவர்களுக்கு இறுதி போட்டிக்கு முன்னர் முன் அல்லது இறுதி போட்டி முடிந்த ஒரு வாரத்துக்குள் ஒப்பந்த தொகை முழுவதையும் தந்து விட வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த தொடரில் டோனியின் ராஞ்சி அணி கோப்பை வென்றது. போட்டிகள் முடிந்து தற்போது 3 மாதங்கள் முடிந்துவிட்டன.

ஆனால் பல வீரர்களுக்கு 2 கோடி முதல் 3 ரூபா கோடி வரை சம்பளம் தரப்படாமல் உள்ளது.

ரெய்னா அணி வீரர்களுக்கும் இதே நிலை தான்.

பயிற்சியாளர்களுக்கு 50 சதவீதம் தான் சம்பளம் தரப்பட்டுள்ளது.

ரெய்னா அணி பயிற்சியாளர் ரோலண்ட் ஆல்டமஸ் இது பற்றி கூறுகையில், ‘சம்பள நிலுவை இருப்பது உண்மை தான்.

இதுகுறித்து கவலை இல்லை. எப்படியும் கொடுத்து விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது,” என கூறியுள்ளார்.

டோனி அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து கூற மறுத்து விட்டார். பல வீரர்களும் வெளிப்படையாக பேச மறுத்தனர். தாங்கள் ஏதாவது தவறாக பேசி, அதனால் அணியில் இடத்தை இழக்க நேரிடுமோ என்று அஞ்சுகின்றமை குறிப்பிடதக்கது.