பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேராவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேரா பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேராவை அழைத்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஊடகவிலயாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெண் ஊடகவியலாளர் பதிவு செய்த ஒலி நாடாவையும் அவர் பொலிஸ் தலைமையகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய நடத்தப்படும் விசாரணை அறிக்கை இன்று பொலிஸ் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

விசாரணை அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.