போதைப் பொருள் மோசடியில் பிரதானமாக ஈடுபட்டு வந்த 3 பேர் ஹெரோயின் 1 கிலோ கிராமுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று அதிகாலை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்திய நவீன வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள், போதைப் பொருள் மோசடி தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா மற்றும் புஸே என்ற நபர்களின் உதவியாளர்கள் 3 பேர் என காவற்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.