விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு..

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வெட் வரி) அறவீட்டுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே, அவர் குறித்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.