40 பில்லியன் ரூபா செலவில் கொழும்பின் புறநகர் அக்குரேகொடவில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் பென்டகன் பாதுகாப்பு தலைமையக மாடிக்கட்டிட பணிகளை நிறுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அத்துடன் அதனை அமைத்து வரும் தனியார் ஒப்பந்தக்காரருக்கான கொடுப்பனவையும் நிறுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
குறித்த மாடித்தொகுதிக்கான உண்மையான கொடுப்பனவு தகவல்கள் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மையமாகக்கொண்டே இந்தநிறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்காமலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால், கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த கட்டிட நிர்மாணிப்புக்கான ஆலோசனை குழுவுக்கு 600 மில்லியன் ரூபாய்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்படவேண்டியுள்ளன..
எனவே, இந்த விடயத்தில் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளமை என்பதில் சந்தேகம் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.