தாஜுதீன் கொலை – CCTV காணொளிகள் ஆகஸ்ட் மாதமளவில் வெளியிடப்படும் – CID

றக்பீ வீரர் வஸீம்  தாஜூதீன் கொலை வழக்கின் சீ.சீ.டிவி காணொளி அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி கனடாவுக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான சுமித் பெரேரா மற்றும் அனுர சேனாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, றக்பீ வீரர் வஸீம் தாஜூதீன் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சீ.சீ.டிவி காணொளி அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் இக்கொலையுடன் தொடர்புடைய முக்கிய பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.