249ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணியினர்

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்போது பிரிஸ்டோலில்  நடைபெற்று வருகிறது.

குறித்த  இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.

நிதானமாக துடுப்பாடிய சந்திமல் 62 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

மேலும் அணித்தலைவர் மெத்திவ்ஸ் 56 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கு 249 ஓட்டங்களாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.