அணிக்காக தன்னலமற்ற சேவையில் மேத்யூஸ்..

இலங்கை – இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியானது இங்கிலாந்து நொடிங்ஹெம் த்ரன்ட் பிரிஜ் மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த போட்டியில் மேத்யூஸ் 73 புள்ளிகளை பெற்று விக்கெட் 2 இனையும் கைப்பற்றியிருந்தார்.

அதன் போது, பந்து காப்பின் போது மேத்யூஸ் இனது காலில் ஏற்பட்ட உபாதையினால் இறுதி ஓவர்களில் பந்துவீச்சிலிருந்து விலகியிருந்தமையும் யாவரும் அறிந்ததே..

அவ்வாறே, இரண்டாவது போட்டியில் மேத்யூஸ் இனது உடற்தகைமை  பரிசோதிக்கப்பட்டு போட்டியில் பந்து வீசுவதிலிருந்தும் விலகினார்.

மூன்றாவது போட்டியில் பந்து வீச்சிலிருந்து விலகியிருக்குமாறு வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டிருந்தும் குறித்த ஆலோசனையினை உதறிய மேத்யூஸ் அணிக்காக பந்துவீச்சில் களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.