சிங்கப்பூர் விமானத்தில் திடீரென தீ.. 222 பயணிகளும் வெளியேற்றம்..

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிங்கப்பூர் விமானம் திடீரென தீப்பற்றிக்கொண்டது.

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளது.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

விமானம் தீப்பற்றிக் கொண்ட போதிலும் விமானத்தில் பயணம் செய்த 222 பயணிகளும் 19 விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் பயணித்த பலர் உறங்கிக் கொண்டிருந்தனர் எனவும் இதனால் பதற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.