வடக்கு கிழக்கின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, அரசாங்கத்துடன் பேச்சு நடாத்துவதுடன், மேலும் ஏனைய விடயங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் விடயங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த குழு செயற்படவுள்ளது.
இந்தக்குழுவில் தலைவர் சம்பந்தனின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், எஸ். ஸ்ரீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், என்.ஸ்ரீகாந்தா மற்றும் ராகவன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை இந்தக்குழுவில் நான்கு கட்சியினரும் முக்கியமாக ஏற்கனவே கூட்டமைப்புடன் முரண்பாடுகளை கொண்டிருந்த சுரேஸ் பிரேமசந்திரன் இணைக்கப்பட்டுள்ளமை கூட்டமைப்பின்ஆரோக்கியமான விடயமாக கருதப்படுகிறது.