எல்லை நிர்ணய அறிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் துரிதம்

எல்லை நிர்ணய அறிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயிக்கும் நோக்கில் தயாரிக்கப்படும் அறிக்கையின் குறைகளை களையும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாகும் என அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அதனடிப்படையில், ஆகஸ்ட் மாத இறுதியில் இது குறித்த அறிக்கை உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ளன.

எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைகளை களையும் நோக்கில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சரினால் அசோக பீரிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.